சேலம் செப் 14-
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பழனி முருகன் வரவேற்புரை ஆற்றினார்.மாநில பொருளாளர் ராஜேஷ் நன்றியுரை ஆற்றினார். சேலம் மாவட்ட தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும், மேலும் தமிழகம் முழுவதும் கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் இல்லையெனில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு பூட்டு போட்டு பூட்டும் போராட்டத்தை தீவிரப் படுத்துவோம். அதற்கும் தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளையும் மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் பூட்டு போட்டு பூட்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
Tags
சேலம்